2022 டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், tancet.annauniv.edu என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான நுழைவு தேர்வு மே 14 ஆம் தேதியும், எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, 2022-23 கல்வியாண்டிற்கான எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளில் சேர தகுதி பெறுவார்கள்
TANCET 2022 – ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?
- முதலில் tancet.annauniv.edu என்கிற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்
- ஹோம்பேஜில், hall ticket link கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து, லாகினுக்கு தேவையான தகவல்களை பதிவிட வேண்டும்.
- இதைத் தொடர்ந்து, அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
- அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக, டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.