சென்னை:
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். முதுநிலை மருத்துவ மாணவி அப்படி செய்ததற்கான காரணத்தைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வருகை பதிவேட்டுக்கான பயோமெட்ரிக் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசு மருத்துவனைகளுக்கு மருத்துவர்கள் சிலர் உரிய நேரத்தில் வருவதில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.