உக்ரைனைத் தொடர்ந்து மால்டோவா நாட்டில் குண்டுகள் வெடித்துள்ளதால், புடின் அடுத்ததாக அந்நாட்டின் மீது கண் வைத்துள்ளாரா என்ற அச்சம் உருவாகியுள்ளது.
மால்டோவா நாட்டிலுள்ள Transnistria என்ற பகுதியில் நேற்று திடீரென குண்டுகள் வெடித்தன. இந்த Transnistria, மால்டோவா நாட்டவர்களை விட அதிக அளவில் உக்ரைனியர்களும் ரஷ்யர்களும் வாழும் இடமாகும்.
இந்த குண்டு வெடிப்பில், Transnistriaவில் அமைந்துள்ள இரண்டு ரேடியோ ஆன்டென்னாக்கள் நாசமாகின.
மேலும், Transnistriaவின் தலைநகரான Tiraspol நகரிலுள்ள மாகாண பாதுகாப்பு அமைச்சகம், ராக்கெட் மூலம் வீசப்படும் குண்டுகளால் பல முறை தாக்கப்பட்டதாகவும், ஆனால், அந்த தாக்குதல்களில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மால்டோவா நாட்டின் மீதான தாக்குதல்கள் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergei Lavrovவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, மால்டோவா நேட்டோ அமைப்புக்குள் இழுக்கப்படுவதால், அந்நாடு தனது எதிர்காலம் குறித்துக் கவலைப்படவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.