இடி தாக்கியதில் செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பிளம்பர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி இவருக்கு திருமணமாகி மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் பிளம்பராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மூலிகை பறிப்பதற்காக அங்குள்ள மைதானத்திற்கு சென்று உள்ளார்.
அப்போது திடீரென இடி தாக்கி அவர் வைத்திருந்த செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது