டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்னும் இரு மாதத்தில் தொடங்க உள்ள நிலையில், 20 பேர் முதல்கட்டமாக 20 வீரர்கள் கொண்ட அணியை அகில இந்திய செஸ் பெடரேசன் அறிவித்து உள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரம் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) 44 வது செஸ் ஒலிம்பியாடுக்கான நாட்டின் மிகப்பெரிய 20 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் 5முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் கலந்துகொள்ளவில்லை. அவர் இந்திய அணியினருக்கு ஆலோசனை வழங்கும் வழிகாட்டியாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
14 நாள் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் புரவலராக இருக்கும் இந்தியா இரண்டு அணிகளைக் களமிறக்குவதற்குத் தகுதி பெற்றுள்ளது. ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் முதன்முறையாக வீரர்களை களமிறக்குகிறது. இந்த போட்டியில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த பெயர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில், இந்தியா நிச்சயமாக பதக்க பெறும் வாய்ப்புகள் உள்ளது.
2020ம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற விதித் குஜ்ராத்தி, பல முறை இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பென்டலா ஹரிகிருஷ்ணா மற்றும் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன் சசிகிரண் ஆகியோருடன் இணைந்து திறந்த பிரிவில் இந்தியாவின் முதல் அணியில் இடம் பெறுவார். 19 வயதான அர்ஜுன் எரிகைசி மற்றும் எஸ்.எல்.நாராயணன் ஆகியோரும் முதல் அணியில் இடம் பெறுவார்கள். மறுபுறம், இரண்டாவது அணியில் தமிழ கவீரர் பிரக்னாநந்தா ஆர், நிஹால் சரின், குகேஷ் டி மற்றும் ரவுனக் சத்வானி உட்பட சிலர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.