தமிழ்ப் படங்களுக்கு உலகளவில் எப்போதும் வரவேற்பு இருக்கும். சமீபத்தில் தமிழில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன. அவற்றில் சில,
சூரரைப் போற்று சூர்யா ஹீரோவாக நடித்த படம் 2020, தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அக்ஷய் குமார் நடிக்க இப்போது இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. அங்கும் சுதா கோங்ராதான் இயக்குநர்.
விக்ரம் வேதா மாதவன், விஜய் சேதுபதி தமிழில் நடித்த ரோலில் இந்தியில் சாயிப் அலி கான் – ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க அதே பெயரில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ஹ்ரித்திக் ரோஷனின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
கைதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் இந்தியில் ‘Bholaa’ என்கிற பெயரில் ரீமேக் ஆகிறது. அஜய் தேவ்கன், தபூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 2023 மார்ச் 30-ல் படம் வெளியாகும் என அஜய் தேவ்கன் அறிவித்திருக்கிறார்.
கோமாளி ஜெயம் ரவி நடித்து வெற்றி பெற்ற படத்தின் மற்ற மொழிகளுக்கான ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியிருந்தார். இந்தி ரீமேக்கில் அவரின் மகன் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.
அருவி படம் இந்தியில் இ.நிவாஸ் இயக்கத்தில் உருவாக இருந்தது. தமிழில் அதிதி பாலன் நடித்த ரோலில் அமீர் கானின் டங்கல் பட நாயகி பாத்திமா சனா ஷேக் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு படத்திலிருந்து விலகினார்.
கோலமாவு கோகிலா நயன்தாரா, யோகி பாபு நடித்த படம் இந்தியில் ‘Good Luck Jerry’ என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. Siddharth Sengupta இயக்க ஷான்வி கபூர் கோகிலாவாக நடித்துள்ளார்.
மாநகரம் படம் லோகேஷ் கனகராஜின் முதல் படமாக 2017-ல் வெளியானது. Vikrant Massey, விஜய் சேதுபதி, Tanya Maniktala நடிக்க சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இந்த வருடம் இந்தியில் Mumbaikar என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது.
துருவங்கள் பதினாறு 2016இல் வெளியான இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இந்தி வெர்சன் படமாக்கப்பட்டு வருகிறது. தமிழில் ரகுமான் நடித்திருந்த ரோலில் வருண் தவான் நடிக்கிறார்.
ராட்சசன் விஷ்ணு விஷால் நடித்த சைக்கோ திரில்லர் ஜானர் படமான ராட்சசனின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார், ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கியிருக்கிறது.
தடம் அருண் விஜய் நடித்த தடம் படத்தின் இந்தி ரீ-மேக்கில் ஆதித்யா ராய் கபூர், மிர்ணாள் தாகூர் இணைந்து நடித்துள்ளனர். வர்தன் கேட்கர் (Vardhan Ketkar) இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
அதே போல, மாஸ்டர் படத்திற்கான இந்தி ரீமேக்கும் உருவாக உள்ளது. விஜய் ரோலில் நடிக்கவிருப்பது சல்மான் கானா, ஷாகித் கபூரா எனப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
இதில் உங்கள் பேவரைட் எது என்பதை கமென்டில் சொல்லுங்க.