மனித குலச் சேவைக்கு அர்ப்பணிக்கும் நாள் இது… தமிழக கவர்னர், தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

சென்னை:
ரம்ஜான் பண்டிகை நாளை (3ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தி:
ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த ரமலான் பண்டிகை நேரத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இசுலாமிய சகோதர , சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நபிகள் நாயகம் கற்றுத் தந்த மனித குலச் சேவைக்கு நம்மையே அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் இது.
முகமது நபியின் அன்புணர்வு, அறவுரை குறித்த போதனைகள், எக்காலத்தும் நம்முடன் நின்று, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டுப்பற்றுடன் கூடிய, தாய் நாட்டு மீதான உயர்வு மனப்பான்மையுடன் நாம் நேர்மையான, முற்போக்கான வாழ்க்கையை நடத்திட நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
சமுதாய மற்றும் வளமான இந்தியாவின் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், நன்மை மற்றும் நல்வாழ்வுக்கான அன்பைப் பரப்பவும், போதிக்கப்படும் தியாகம், அகிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தார்மீகப் பாதையை கடைப்பிடிக்க இந்த நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.
அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகின்றேன்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி:
இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் “ரம்ஜான்’’ திருநாளில் எங்கள் உளங்கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனை களை மனதில் நிறுத்தி, உடலை யும், உள்ளத்தையும் ஒரு நிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் எங்கள் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்களது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள் என்பதை ரமலான் செய்தியாக தமிழக காங்கிரஸ் கூற விரும்புகிறது. இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் ராமதாஸ்: ரமலான் கற்றுத் தரும் பாடங்களை இஸ்லாமி–யர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைபிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி. உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
அன்புமணி ராமதாஸ்: இன்றைய சூழலில் உலகின் முதன்மைத் தேவை அமைதியும், வளர்ச்சியும் தான். இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.
நோன்பு உடலையும், உள்ளத்தையும் மேலும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், மகிழ்வும் பெரு–கிடவும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு அனைவரும் நல்ல உடல்நலமுடன் வாழ ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரத்குமார்
சரத்குமார்: இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், வாழ்க்கை தரம் உயர்வதற்கும், சமூக, பொருளாதாரத்தில் முன்னே––றுவதற்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து உறுது–ணை–யாக செயல்பட்டு வரும் என தெரிவித்து, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரி–களுக்கு ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எர்ணாவூர் நாராயணன்: இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த மனித–நேயம், ஈகை, கோபம் தவிர்த்தல் உள்ளிட்ட உயர் பண்புகளின் வழியாக தலைசிறந்த மனித சமுதா–யத்தை உருவாக்க புனித ரமலானில் இஸ்லாமிய மக்களுக்கு எனது மன–மார்ந்த ரமலான் நல்வாழ்த்–துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜவாஹிருல்லா: இந்த ஈகைத் திருநாள் ஒரு மாதக் காலம் நோன்பு இருந்து இறைவனை வணங்கியதற்கு இறைவன் மகத்தான கூலியைக் கொடுக்கும் தினமாகும். இந்த நாளில் நமக்காக நமது குடும்பத்தினருக்காக மட்டுமில்லாமல் நம் நாட்டில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வில் சுபிட்சம் ஏற்படவும் நல்லி–ணக்கம் தழைத்து ஓங்கவும் பிரார்த்தனை புரிவோம்.
என்.ஆர்.தனபாலன்: உலக சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் கடைபிடித்திட உலக ஒற்றுமைக்கும், ஒருமை பாட்டையும் உருவாக்கிட அனைவரும் பாடுபட இந்த ரம்ஜான் திருநாளில் உறுதியேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.