நியூயார்க்: எங்கள் திருமணம் மிகப்பெரியது என்றும் விவகாரத்து செய்த மனைவி மெலிண்டா கேட்ஸை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப். மூன்று குழந்தைகள் ஆவர்.
2000-ம் ஆண்டு, ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை என்ற பெயரில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து, ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது வரை இந்த அறக்கட்டளை தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
தொடக்கத்தில் தம்பதிகளாக இருவரும் இணைந்து இந்த அறக்கட்டளையை கவனித்துக் கொண்டிருந்தனர். விவகாரத்து ஆன பிறகு அறக்கட்டளை என்னா ஆகுமோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
ஆனால் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்தநிலையில் இல்லற வாழ்வில் இனி பிரிந்து பயணித்தாலும், மனிதாபிமான நடவடிக்கைகளில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
பின்னர் இதுபற்றி மெலிண்டா கேட்ஸ்,வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்ட சமயங்களில் நாட்கணக்கில் அழுதது குறித்தும், பிரிவை தொடர்ந்து எப்படி வாழப் போகிறோம் என்ற கேள்வி தனக்குள் எழுந்தது கொண்டதாகவும் கூறினார்.
மீண்டும் திருமணம்?
இந்தநிலையில் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸுடனான தனது திருமணம் மிகப்பெரியது என்றும், அவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
விவகாரத்து செய்து ஏறக்குறைய ஓராண்டு ஆகியுள்ள நிலையில் பில்கேட்ஸ் லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் முக்கியமான ஆண்டாகி போனது. இதற்கு காரணம் கரோனா. எனக்கு இது வித்தியாசமான காலம். பலவற்றை உணர்த்திய காலம் இது. குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒவ்வொரு திருமணமும் மாற்றத்தை நோக்கி செல்கிறது. விவாகரத்து ஆனாலும் எங்கள் திருமணம் சிறந்த திருமணம்.
முன்னாள் மனைவியுடன் இன்னும் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். நாங்கள் ஒன்றாக வேலை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஒன்றாக அறக்கட்டளையை உருவாக்கினோம்.
எங்கள் அறக்கட்டளையின் வருடாந்திர ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. அவளும் நானும் ஒன்றாக நடத்தும் வருடாந்திர கூட்டமும் இதுவாகும்.
மெலிண்டாவுடன் இன்னும் நட்புடன் இருப்பதாக நம்புகிறேன். மெலிண்டாவுடன் எனக்கு மிக முக்கியமான, நெருக்கமான அதேசமயம் சிக்கலான உறவு இருந்தது. இருப்பினும் நாங்கள்ள் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தோம்.
எங்களின் திருமணம் ஏன் முதலில் முடிவுக்கு வந்தது என்பதைப் பொறுத்தவரை திருமணங்கள் மிகவும் சிக்கலானவை, அதை ஆராய்வது பயனுள்ளது அல்ல. விவாகரத்தின் தாக்கத்தில் இருந்து இருவரும் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.
நான் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆம். நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்வேன். எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை, என்னிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் திருமணத்தை பரிந்துரைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெலிண்டா கேட்ஸ் மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்டபோது, அது தனக்குத் தெரியாது பில்கேட்ஸ் கூறினார்