How to: நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? I How to apply UGC NET online?

‘நெட் (NET – National Eligibility Test)’ தேர்வுக்கு மே 20-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை மானியக் குழு (UGC) சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நெட்’ தேர்வு, இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதித் தேர்வு.

விண்ணப்பம் | Application Form

வழக்கமாக, ஆண்டு தோறும் இருமுறை ‘நெட்’ தேர்வு நடத்தப்படும். கொரோனா சூழலால் இந்த ஆண்டு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் தேர்வில் பங்குபெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், மே 20 வரை விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எப்படி ஆன்லைன்னில் விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

NET தேர்வுக்கு ஆன்லைனில் அப்ளை செய்யும் வழிமுறைகள்

* NET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான அதிகாரபூர்வ இணையதளமாக அறிவிக்கப்பட்டுள்ள https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

* இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் UGC NET 2021 மற்றும் 2022 தேர்வுக்கு அப்ளை செய்வதற்கான நோட்டிஃபிகேஷன் பகுதி காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்து உள் செல்லவும்.

* தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் முதலில் நீங்கள் register செய்திருக்க வேண்டும். அதற்கு, திறக்கும் பக்கத்தில் கீழே New register என்ற பகுதி இருக்கும். அதனை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் திறக்கும் பக்கத்தில் உங்களது தனிப்பட்ட விவரங்கள், முகவரி போன்ற தகவல்களை பூர்த்தி செய்யவும். கூடவே உங்களுக்கான password செட் செய்து கொள்ளவும்.

Online Application (Representational Image)

* பின் உங்களுடைய password மற்றும் விண்ணப்ப எண்ணைக் கொண்டு அப்ளை செய்வதற்கான பக்கத்தில் login செய்யவும்.

* அதன் பின் திறக்கும் பக்கத்தில் UGC NET-க்கான விண்ணப்பப் படிவத்தின் மற்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்பவும். தொடர்ந்து
ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை அப்லோடு செய்யவும்.

* அடுத்ததாக, கட்டணம் செலுத்திய பின் உங்களுடைய விண்ணப்பத்தினை சரிபார்த்து, ஆன்லைனில் படிவத்தை சரிபார்த்த பின் சப்மிட் கொடுக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கட்டணங்கள்

பொதுப் பிரிவை சேர்ந்தவர்களுக்கு – ரூ. 1100
பொது – EWS, OBC – NCL – ரூ. 500
SC, ST மற்றும் PWD பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு – ரூ. 275

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.