காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் சுற்றக் கூடாது – தமிழக அரசு வெளியிட்ட நடைமுறை.!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோடை காலத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,

நாம் என்ன செய்ய வேண்டும்?

*அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
*பயணத்தின் போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
*ஓஆர்எஸ், எலுமிச்சைச் சாறு, இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும்.
*முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
*காற்றோட்டம் உள்ள குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
*பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
*வெளியே செல்லும்போது காலணி அணிய வேண்டும்.
*மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும்.

நாம் என்ன செய்யக் கூடாது?

*காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் சுற்றக் கூடாது.
*வெறுங்காலுடன் நடக்க கூடாது.
*மதிய வேளையில் வீட்டின் மொட்டை மாடியில் விளையாட கூடாது.
*செயற்கை குளிர்பானங்கள், மது, புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பாதிப்பு வந்தால் சிகிச்சைக்கு…

*உடல் வெப்பம் மற்றும் மனக் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.
*மருத்துவ உதவிக்கு 108 அவரச ஊர்தி சேவையை பயன்படுத்தவும்.
*அவரச உதவிக்கு 104 என்ற எண்னை அழைக்கவும்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.