நைஜீரியாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 8 பேர் பலி..!

லாகோஸ்,
நைஜீரியாவின் தென்மேற்கு லாகோஸ் மாநிலத்தில் நேற்று இரவு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானதாக தேசிய அவசரநிலை மேலாண்மை அமைப்பு அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தின் ஓனிக்போ பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மீட்புப் பணி நடைபெற்றது. மீட்புப் படையினர் இதுவரை 8 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நைஜீரியாவில் இதுபோன்று கட்டிடங்கள் இடிந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. பழைய கட்டிடங்கள், சரியான திட்டமிடல் இல்லாதது, விதிமுறைகளை மீறிய கட்டுமானம் மற்றும் கட்டுமானத்தின் போது தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் காரணமாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.