மயிலாடுதுறை: ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று சமீபத்தில் பேசிய தருமபுரம்ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்விழாவின் போது ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது வழக்கம். இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில், ‘‘தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து துக்கி செல்வ தற்கு தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கறுப்புகொடி போராட்டம் நடத்தியது மேலும், ஆளுநர் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எறிந்து பதாதைகளை சாலையில் தூக்கி வீசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் தருமபுரம் ஆதினம் என்ற ஆளுநருக்கு ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின் ஞானரத யாத்திரையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த நிகச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, ‘தருமபுரம் ஆதீனத்தில் நுழையும்போதே உடலில் ஒரு அதிர்வு ஏற்படுவதாகவும், தருமபுரம் ஆதீனம் பல கல்வி சேவைகளை ஆற்றி வருவதாகவும், இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகையே இந்தியாவே வழிநடத்தும் அதற்கு ஆன்மீகமே உறுதுணையாக இருக்கும். அந்த ஆன்மீகத்தை வளர்ப்பதில் தருமபுரம் ஆதீனம் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் பேசும்போது, ‘ரவி என்றால் சூரியன் என்று பொருள். தமிழகத்தில் ஆளுகின்ற கட்சியின் சின்னமும் உதயசூரியன்தான். உலகுக்கெல்லாம் ஒரு சூரியனாக இருந்தாலும்கூட, தமிழகத்தில் மட்டும் இரண்டு சூரியன்கள் ஒருமித்து இருப்பதையே நமக்கு இந்நிகழ்வு காட்டுகிறது. இது தெய்வ செயலாகும். ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதினத்தை பல்லக்கில் தூக்கும் செல்லும் பாரம்பரியமான நிகழ்வுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது.