Satellite Internet: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் புராஜக்ட் குயிப்பர்!

அமேசான்
நிறுவனம்,
எலான் மஸ்க்
நிர்வகிக்கும் SpaceX-இன் ஸ்டார்லிங் சேட்டிலைட் இன்டர்நெட் சேவைக்குப் போட்டியாக புதிய “
Project Kuiper
” திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக அனைவருக்கும்
Satellite Internet
சேவையை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏப்ரலில், அமேசான் நிறுவனம் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வணிக விண்வெளித் துறையின் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. மூன்று வெவ்வேறு நிறுவனங்களுடன் அதன் Kuiper செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமேசான் புராஜெக்ட் குயிப்பர்

இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜினுடன், யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் (போயிங்கின் கூட்டு நிறுவனம்), Lockheed Martin, ஐரோப்பாவின் Arianespace ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பல வழிகளில், இது எலான் மஸ்க் மற்றும் அவரைச் சார்ந்த ஸ்பேஸ்எக்ஸுக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நெட்வொர்க் சேவைக்குப் போட்டியாக இருக்கும்” என்று CNBC விண்வெளி செய்தியாளர் மைக்கேல் ஷீட்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். அமேசான் முதன்முதலாக புராஜெக்ட் கைப்பரை 2019-இல் வெளிப்படுத்தியது. ஆனால் கடந்த மாதம் நிறுவனத்தின் புதிய அறிவிப்புகள் திட்டத்திற்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங் சேவை

SpaceX இன் ஸ்டார்லிங்க் நெட்வெர்க், ஏற்கனவே சுமார் 2,000 செயற்கைக்கோள்களை புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை சுமார் 2 லட்சத்து 50ஆயிரம் சந்தாதாரர்களுக்கு Satellite Internet சேவை அளித்து வருகிறது.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங் திட்டத்தில், மொத்தம் 12,000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது நிறுவனத்தின் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

அமேசான் இதுவரை ஒரு செயற்கைக்கோளை கூட இந்த சேவைக்காக விண்ணில் செலுத்தவில்லை. எனினும், இந்த சேட்டிலைட் இன்டர்நெட் சேவை வழங்கும் சந்தையில் நிறுவனம் சிறந்த போட்டியாளராகத் திகழும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த ரஷ்யா!

போட்டியாளர்கள் தேவை

இது கருத்து தெரிவித்திருக்கும் குயில்டி அனலிட்டிக்ஸின் (Quilty Analytics) மூத்த ஆய்வாளர் காலேப் ஹென்றி (Caleb Henry), “செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சந்தையானது சில பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஒன்றாகும். இந்தத் துறையில் உள்ள யாரும், ஒரு நிறுவனம் தான் அனைத்து விதமான சூழல்களையும் தாங்கி நிற்கும் என்று நம்புவதில்லை.

குறைந்த பட்சம் இரண்டு அல்லது அதற்கு அதிகமான நிறுவனங்கள் விண்ணில் செயற்க்கைக்கோள்களை ஏவுவதைக் காண நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம். இது குடியிருப்பு நுகர்வோருக்கு மட்டுமல்ல; இணைய இணைப்பை நம்பியிருக்கும் எந்த வகையான வணிகம் அல்லது நிறுவனத்திற்கும் சிறந்த சேவையை வழங்கும் முயற்சியாகும்.” என்று கூறியுள்ளார்.

Movie Rentals: படங்களை வாடகைக்கு விடும் அமேசான் பிரைம் வீடியோ!

இணையத்தை ருசிக்காத மக்கள்

ஐக்கிய நாடுகளின் அமைப்பான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியனின் தரவுகளின்படி, உலக மக்கள்தொகையில் 37% விழுக்காடு பேர் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தவில்லை. அதில், 96% விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் வரிசையில் தற்போது அமேசானும் இணைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.