தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து 4,855 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து 38,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 குறைந்து, 67.60 ரூபாய்க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.1900 குறைந்து 67,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.