திருமணத்திற்கு தயாரான பிகில் பட நடிகை… நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

Bigil Movie Actress Gayathri Reddy Engaged : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை காயத்திரி ரெட்டி தனது நிச்சியத்தார்த்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். பெண்கள் காலல்பந்து விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். மேலும் கால்பந்தாட்ட வீராங்கனையாக இளம் நடிகைகள் பலர் நடித்திருந்தனர். இதில் மாரி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி ரெட்டி.

தொடர்ந்து பிக்பாஸ் கவினுடன் லிப்ட் படத்தில் நடித்த காயத்ரி, ஜீ தமிழின் சவர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று 43 நாட்கள் காட்டில் இருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் முத்திரை பதித்து வரும் காயத்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனக்கு நிச்சியதார்த்தம் நடந்ததாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் வெளியிட்டு”#engaged #mrstobe #newchapterbegins” என்ற ஹேஷ்டேக்குகளுடன் “29-04-2022 முதல் இறுதிவரை நீங்களும் நானும் கைகோர்த்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.