ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கீடு வெளியீட்டின் ஆன்கர் முதலீட்டாளர்களுக்காக பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 5 ஆயிரத்து 620 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்.ஐ.சியின் சுமார் 22 கோடியே 13 லட்சத்து 74, 920 பங்குகளை தலா 902 ரூபாய் முதல் 949 ரூபாய் என்ற விலையில் மத்திய அரசு விற்பனை செய்கிறது. இதன் மூலம் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களும் பங்கு விற்பனை நாளை முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய பங்கு சந்தை வரலாற்றிலி முதல் பொது வெளியீடு மூலம் திரட்டப்படும் மிகப்பெரிய தொகை இதுவாகும்.
இதையும் படிக்கலாம்: சுரங்க ஒப்பந்தத்தில் முறைகேடு: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM