காத்திருப்போர் பட்டியலிலுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர்: வலுக்கும் எதிர்ப்பு

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கும் வெள்ளை அங்கி அணிவித்து இப்போகிரேடிக் உறுதிமொழி ஏற்க வைப்பது பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் முன்னிலையில், 250 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததால் சர்ச்சை
இந்த உறுதிமொழி தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கை குறித்து தமிழக அரசிடமிருந்து எந்தவொரு விளக்கமும் வராத நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் “தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் `சரக்கா சபதம்’ என்னும் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்த உடனேயே அந்த உறுதிமொழியை முழுவதுமாக எதிர்த்தது. சரக்கா சபதம் மூல ஆவணத்தில் ஒரு குறிப்பீட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மேன்மைப்படுத்தி கூறப்பட்டு உள்ளது.
பசுக்களை மேன்மைப்படுத்தியும், ஆண் பெண் நோயாளிகள் பேதங்களை கூறி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிபந்தனைகள் விதித்ததும், `மகரிஷி சரக்கா’ நவீன மருத்துவத்தை பயன்படுத்தாதவர் என இருக்கிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஹிப்போ கிரிடீஸ் உறுதி மொழியை இந்தியாவிலும் பயன்படுத்த வேண்டும். ஆகையால் சரக்கா சபதம் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் பயன்படுத்தக் கூடாது என்பதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உறுதியாக நம்புகிறது.
Sanskrit-Pledge-Matter--Madurai-Government-Medical-College-Dean-Transferred-to-Waiting-List
கடந்த 7.2.2022 அன்று தேசிய மருத்துவ ஆணைய எம்.பி.பி.எஸ் சேர்க்கை குறித்த ஆன்லைன் கூட்டத்தில் அதனுடைய தலைவர் அருணா வணிகர், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் நிகழ்வு இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவும் (இது நாள் வரை இது போன்ற விழாக்கள் தமிழக அரசு மருந்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது இல்லை). அந்த விழாவில் சரக்கா உறுதி மொழியை அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து பல்வேறு ஆணைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க: சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி வாகை சூடி சாம்பியனான கேரள அணி!
31.02.2022 அன்று தேசிய மருத்துவ ஆணையத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அதனுடைய தலைவர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது, இந்த சுற்றறிக்கை என்பதையும் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விழா மற்றும் வெள்ளை அங்கி அணியும் நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் சரக்கா சபதம் உறுதிமொழி மருத்துவ மாணவர்களால் ஏற்கப்பட வேண்டும் என்றும் அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பல்வேறு முதல்வர்களுக்கும் மருத்துவர்களுக்கும் சங்கத்திற்கும் இந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கை குறித்து மாறுபட்ட சுருத்து இருந்தாலும் இது குறித்து வேறு சுற்றறிக்கையோ அறிவுறுத்தல்களோ தமிழக அரசிடமிருந்தும், மத்திய அரசிடம் இருந்தும் வராத நிலையில் பெரும்பாலான தனியார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இந்த சுற்றறிக்கை பின்பற்றி வெள்ளை அங்கி அணியும் மற்றும் சரக்கா சபதத்தை மருத்துவ மாணவர்களை எடுக்க வைத்தனர்.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் வரவேற்பு  நிகழ்ச்சியில் சர்ச்சை | Pledge in Sanskrit Controversy at the reception of  medical college students ...
இது போலவே 30.04.2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியிலும் வெள்ளை அங்கி அணியும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி இருந்த சரக்கா சபதமும் மருத்துவ மாணவர்கள் உறுதி மொழியாக எடுத்தனர், இந்த நிகழ்வில் சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் பயன்படுத்தி எந்தவித உறுதிமொழியை அல்லது பேச்சுக்களோ நடைபெறவில்லை என்பதனை சங்கம் முதவ்வர் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறது, வெள்ளை அங்கி அணியும் நிகழ்வு மற்றும் சரக்கா உறுதிமொழி மதுரையில் நடந்த நிகழ்வில் ஆங்கிலத்தில் தான் எடுக்கப்பட்டது,
ஆனால் தவறுதலாக தினசரி மற்றும் நொலைக்காட்சிகள் மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருநத்தில் உறுதிமொழி எடுத்தார்கள் என்று செய்திபடுத்திவிட்டது. ஆகவே மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.