விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது என்ன வகையான புற்றுநோய் என்பது குறித்தும் தெரியவந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலையில் கோளாறு இருப்பதை அவரின் சமீபத்திய வெளிதோற்றங்கள் அம்பலபடுத்தியுள்ளன.
தகவலின்படி புடின் வயிற்று புற்றுநோய், பார்கின்சன் நோய் மற்றும் ஸ்கிசோஆஃபெக்டிவ் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
18 மாதங்களுக்கு முன்னரே அவருக்கு இந்த நோய்கள் ஏற்பட்டிருக்கிறது.
அடங்காத ரஷ்யா! உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் தந்த சக்திவாய்ந்த ஆயுதங்களை அழித்துவிட்டதாக அறிவிப்பு
சமீபத்தில் மட்டும் 35 முறை புற்றுநோய் மருத்துவரிடம் சென்று அவர் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்.
மான் கொம்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரத்தத்தில் புடின் குளிப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒருவகையான சிகிச்சையாக கருதப்படுகிறது.
ஏனெனில் இது போன்ற குளியல் இருதய அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் சருமத்தை புதுப்பிக்கிறது என்று கூறுகிறார்கள்.
புடினுக்கு ஏப்ரல் இரண்டாம் பாதியில் அறுவை சிகிச்சை நடைபெறுவதாக இருந்தது, ஆனால் அது தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து விரைவில் அவருக்கு சிகிச்சைகள் நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரஷ்யாவை முன்னாள் கேஜிபி புலனாய்வு அதிகாரி நிகோலாய் பட்ருஷேவ் கட்டுப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 வயதான பட்ருஷேவ் உக்ரைன் போரின் முக்கிய மூளையாக கருதப்படுகிறார்.
மேலும், இவர் புடினின் நம்பிக்கைக்கு பாத்திரமான நபராகவும் அறியப்படுகிறார். புடின் சிகிச்சைக்கு செல்லும் பட்சத்தில் உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை இவரே வழிநடத்துவார் எனவும் கருதப்படுகிறது.