முதல்நாளே இப்படியா? – பங்கில் சுறுசுறுப்பாக வேலை பார்த்து மாலை பணத்துடன் ஓட்டம் !

சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. பிரதான இடம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டிசல் நிரப்பிச்செல்வது உண்டு. இந்த நிலையில், இங்கு எரிபொருள் நிரப்பும் பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. 

இதை பார்த்த செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மாரியப்பன் (33) என்பவர், கடந்த 21ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். அப்போது, வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டப்போது, ஆவணங்களை நாளை கொண்டு வந்து தருவதாக பெட்ரோல் பங்க் மேலாளர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் நம்பிக்கையின் அடிப்படையில் முதல்நாள் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

money

பணியில் சேர்ந்த முதல் நாளில் விறுவிறுப்பாக பணி செய்துள்ளார். ஆனால், இந்த சுறுசுறுப்பு எதற்கு என்பது அதற்கு பிறகு தான் தெரியவந்தது. அதாவது பெட்ரோல் நிரப்பி வசூலான ரூ.39 ஆயிரத்தில் ரூ.25 ஆயிரம் மட்டும் நிறுவனத்தில் வரவு வைத்துள்ளார். மீதமுள்ள ரூ.14 ஆயிரம் ரொக்கத்துடன் மாயமாகிவிட்டார். 

பிறகு பெட்ரோல் பங்கின் அன்றைய வருமானத்தை கணக்கு பார்த்த போது, மாரியப்பன் வசூலான பணத்தில் ரூ.14 ஆயிரத்தை வரவு வைக்காமல் சென்றது தெரியவந்தது. உடனே மாரியப்பனை போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் முகவரியும் கொடுக்காததால், இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்படி போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து செங்கல்பட்டு பகுதிகளில் விசாரணை நடத்தினர். அப்போது, மாரியப்பன் வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டிற்கு வாடகைக்கு சென்று விட்டது தெரியவந்தது. பிறகு செல்போன் சிக்னல் உதவியுடன் மாரியப்பனை போலீசார் பிடித்தனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், மாரியப்பனுக்கு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளன. குழந்தைகளை அவரது மனைவி கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். 

money

மாரியப்பன் குடிக்கு அடிமையானதால் அவருக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. இதனால் வேலை தேடி சென்னை வந்த போது, பெட்ரோல் பங்க்கில் வேலை கிடைத்தது. ஆனால் வேலை செய்த முதல் நாளிலேயே ரூ.14 ஆயிரத்தை கையாடல் செய்து, அந்த பணத்தில் ரூ.12,900 மது குடித்தே அழித்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஒரு பக்கம் வறுமையில் வாடும் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மது அருந்தியது போக மிதமுள்ள ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது.

இவரை மட்டும் வங்கியில் கேஷியராக பணி அமர்த்தினால் எப்படி இருக்கும்? இது உங்கள் கற்பனைக்கு..

newstm.in
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.