வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க் : முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்துகொள்ள, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில் கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும், பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ், 66, மெலிண்டாவை, 57, கடந்த, 1994ல் திருமணம் செய்தார். கடந்த, 27 ஆண்டுகளாக கணவன், -மனைவியாக வாழ்ந்த இவர்கள், கடந்த ஆண்டு விவகாரத்து பெற்றனர். விவாகரத்து பெற்றாலும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில், இருவரும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பில் கேட்ஸ் கூறியதாவது: மெலிண்டாவிடம் இருந்து நான் விவாகரத்து பெற்றிருந்தாலும், இப்போதும், என் முன்னாள் மனைவியுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்த விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எதிர்காலத்தை பொறுத்தவரை எனக்கு எந்த திட்டமும் இல்லை. அப்படி திருமணம் செய்ய முடிவு செய்தால், நான் கண்டிப்பாக மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்துகொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement