சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ‘மத்திய’ அரசு என்ற வார்த்தையை ‘ஒன்றிய’ அரசு என மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் அதிகாரம் குறித்து இடம் பெற்றிருக்கும் பாடத்திட்டங்களில் சில திருத்தங்கள் செய்து புதிய புத்தகங்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
