ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி… ஜெர்மனியை மிரட்டும் ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு மாத காலங்களுக்கு மேலாக தொடர்கிறது. இதற்கிடையில், உக்ரைனுக்கு உதவ வேண்டாம் என்றும்,  மீறினா; போரில் நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற நிலைமையை ஜெர்மனி இழக்க நேரிடும் என்று ரஷ்யா ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஜெர்மனி வெளியிட்டுள்ள மறுப்பு

ரஷ்யா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட், கடந்த 6 வாரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை ஜெர்மனி முடுக்கிவிட்டதாகக் கூறினார். ஆனால் ஜெர்மனியில் கட்டப்பட்ட அமெரிக்க தளத்தில் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் அவர் எல்லை மீறுகிறார் என்று கூறுவதை அவர் ஏற்கவில்லை. ஜெர்மனியில் உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என்பது நேரடியாக போரில் ஈடுபடுவது ஆகாது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்… வெளியான அதிர்ச்சித் தகவல்

உக்ரைன் வீரர்களுக்கு ஜெர்மனி மண்ணில் பயிற்சி 

உக்ரைனுக்கு தானியங்கி விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை வழங்குவதற்கான திட்டங்களை ஜெர்மன் அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் அமெரிக்காவின் ராம்ஸ்டீன் தளத்தில் மேற்கு பீரங்கி அமைப்புடன் உக்ரேனிய துருப்புகளுக்கு பயிற்சி அளிக்க பெர்லின் ஆதரவளிக்கும் என்று அறிவித்தார்.

பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு

உக்ரைன் படையினர் நீண்ட காலமாக ஜெர்மன் மண்ணில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரலில், பென்டகன் மற்றொரு நாட்டில் உக்ரைன் துருப்புக்களுக்கு உதவுவதாக அறிவித்தது. கடந்த வெள்ளியன்று, அமெரிக்க இராணுவம் தனது ஜெர்மன் தளங்களில் வீரர்கள் பயிற்சி பெற்றதை உறுதிப்படுத்தியது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

எதிர் கட்சிகளின் விமர்சனம்

எனிமும், இது குறித்து ஜெர்மன் அரசின் எதிர் கட்சிகள் விமர்ச்சிக்கின்றன. பெர்லினின் இந்த நடவடிக்கை மூலம் ஐரோப்பாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜாக்குலின் நாஸ்டிக் திங்களன்று கூறினார். பெர்லினை போரில் தீவிரமாக ஈடுபட செய்யும் முயற்சி இது என்று கூறினார்.

பிப்ரவரியில், ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைனைத் தாக்கி, போரை தொடங்கியதிலிருந்து, உக்ரைனின் பல நகரங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பின்வாங்க தயாராக இல்லை.

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.