சென்னையில் இனி பகலிலும் பூங்காக்கள் திறந்து வைக்கப்படும்! சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் இனி பகலிலும் பூங்காக்கள் திறந்து வைக்கப்படும் எனசென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இதுரை காலை, மாலை மட்டுமே திறக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் பகலிலும் பூங்காங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காங்களை பராமரிப்பு காண்டிராக்ட் விடப்பட்டு  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் பூங்காக்கள் திறப்பது மூடுவதும் மட்டுமின்றி, முறையாக பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. தற்போது,   காலை 5 மணி முதல் மாலை 9 மணியிலும் மாலை 4மணி முதல் 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,  சென்னை மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு நேரம் தொடர்பான தகவலை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை  விசாரித்த மாநில தகவல் ஆணையம் பகல் நேரத்தில் பூங்காக்களை மூடி வைப்பது சரியல்ல என்று கூறியது. அதன் உத்தரவில்,  ” மக்கள் பணி நிமித்தமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும்போது கோடை வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுத்துக்கொள்ள இடம் இல்லாமல் சிரமப்படுகின்ற நிலையில் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்காக்கள் மூடி இருப்பது சரியானது அல்ல. எனவே பூங்காக்கள் எப்போது திறக்கப்பட வேண்டும், எப்போது மூட வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக பூங்கா துறை கண்காணிப்பு பொறியாளர் அனுப்பிவைக்க வேண்டும். இதன் நகலை ஆணையத்திற்கும், மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் காலை 5 மணி முதல் மாலை 9 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மண்டலங்களுக்கும் மாநகராட்சி பூங்கா துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.