தினசரி சரும பிரச்சனைகளை சரிசெய்ய ஹோம்மேட் ஃபேஸ் வாஷ்.. எப்படி செய்றதுனு பாருங்க!

நேச்சுரல் ஃபேஸ் கிளென்ஸர்ஸ்’ ஆடம்பர விஷயமாக கருதப்படுகிறது. ஆனால், பைசா செலவில்லாமல் உங்கள் சமையலறையில் இருந்து எளிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே நீங்கள் ஃபேஸ் கிளென்ஸர்ஸ் தயார் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அது சாத்தியம்தான்.

தொற்றுநோய் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்ததிலிருந்து, வெளியில் செல்வது ஒரு சவாலாக இருக்கும்போது, ​​வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் தயாரிப்பது பாதுகாப்பானது.

இயற்கையான கிளினீங் தானியங்கள் சிறிது தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் முகத்தில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தும். பல உயர்தர அழகு பிராண்டுகள் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் மாற்றுவதால், சுத்தப்படுத்தும் தானியங்கள் (cleaning grains) மீது சத்தியம் செய்கின்றன.

ஃபேஸ் வாஷ் பவுடரை வீட்டிலேயே செய்ய தேவையான பொருட்கள்!

ஓட்ஸ் பவுடர்: இது ஒரு சிறந்த இயற்கை ஸ்க்ரப்பர், இது சருமத்தை ஒரே நேரத்தில் சுத்தம் செய்து, மென்மையாக்கும் மற்றும் ஈரப்பதமாக்குகிறது.

பாதாம் பவுடர்: இதில் உள்ள எக்ஸ்ஃபோலியண்ட் பண்புகள் உங்கள் தோல் பராமரிப்பு தயாரிப்பில் சிறந்த ஏஜண்டாக அமைகிறது.

ஒரு சிட்டிகை மஞ்சள்: இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உங்கள் சருமத்தை குணப்படுத்தி, இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது.

கடலை மாவு: இந்த மாவில் உள்ள துகள்கள்’ உங்கள் துளைகளிலிருந்து அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றி, அவற்றைத் திறந்து மேலும் சிறிது சுவாசிக்க உதவுகிறது.

லாவெண்டர் எண்ணெய்: லாவெண்டர் அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தும், எனவே இது பாதுகாப்பானது. இது முகப்பரு புள்ளிகள், வடுக்களை அகற்ற உதவுகிறது, அழற்சி மற்றும் எரிச்சலூட்டும் தோலை அமைதிப்படுத்துகிறது.

பவுடர் ஃபேஸ் வாஷ்

தேவையான பொருட்கள்

* 1/4 கப் ஓட்ஸ்

* 1/2 கப் பெசன்

* 2 டீஸ்பூன் பாதாம்

* லாவெண்டர் எண்ணெய் 10 சொட்டுகள்

* 1 டீஸ்பூன் மஞ்சள்

செய்முறை

* ஒரு கிண்ணத்தை எடுத்து, எண்ணெயுடன் அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும்.

* கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும். ஒவ்வொரு முறை முகம் கழுவும் போது, ஒரு ஸ்பூன் எடுத்து முகத்தில் மெதுவாக தேய்த்து பிறகு தண்ணீரில் கழுவவும்.

கண்டிப்பா இந்த ஃபேஸ் வாஷ் பவுடரை நீங்களும் முயற்சி செய்து பாருங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.