காத்மண்டு: நேபாளத்திற்கு சென்றுள்ள ராகுல், அங்கு பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நண்பரும் தனியார் செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேபாள் தலைநகர் காத்மண்டுக்கு ராகுல் 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். சும்நிமா உதாஸ் என்பவர் நிமா மார்ட்டின் ஷெர்பாவை மே 5ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதில் கலந்து கொள்ள காத்மண்டு சென்றுள்ள ராகுல் அங்குள்ள மேரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டியில் ராகுல் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
காத்மண்டு: நேபாளத்திற்கு சென்றுள்ள ராகுல், அங்கு பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நண்பரும் தனியார் செய்தி நிறுவனத்தின் முன்னாள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.