பொதுத் தேர்வு: ஆசிரியர்கள் சஸ்பெண்ட் – ஷாக் நியூஸ்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பல்வேறு மாநிலங்கள் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்பே நடத்தப்பட்டதால், பொதுத்தேர்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுப்பெற்றன. ஆனாலும், இந்த ஆண்டு திட்டமிட்டபடி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
பொதுத் தேர்வு
நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக
ஆசிரியர்கள்
ஏழு பேர் பனியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணா மாவட்டத்தில் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாகவும், தேர்வு மையத்திற்கு விடைத்தாள் அனுப்பப்படுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.

அதனடிப்படையில், தேர்வு மையங்களில் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர். கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மேற்கொண்ட விசாரணையில், பல ஆசிரியர்களின் செல்போன்களில் தேர்வு தாள்களுக்கான விடைகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம், தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதியாகியுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, முறைகேட்டில் ஈடுபட்டதாக பசுமரு ஜில்லா பரிஷத் பள்ளியைச் சேர்ந்த 6 ஆசிரியர்களும், கனுமோலு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொதுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 42 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.