அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை துவம்சம் செய்த சூறாவளி; மனம் பதற வைக்கும் காட்சிகள்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை நேற்று முன்தினம் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி வீடுகள், கட்டிடங்கள் பெரும் சேதமடைந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் வெகு தூரம் தூக்கி வீசப்பட்டன.

மரங்களை வேறோடு சாய்ந்ததோடு, வாகனங்கள், மின் கம்பங்கள் ஆகியவை தூக்கி வீசப்பட்டன. சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. 

ட்விட்டர் பயனரான ரீட் டிம்மர், அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் சில பகுதிகளை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளியின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்… ஆனால்… நடந்தது என்ன..!! 

வைரலான சூறாவளி வீடியோ:

இந்த சூறாவளி கன்சாஸ் மாகாணத்தின் அண்டோவர் என்ற நகரை முற்றிலுமாக புரட்டிப்போட்டு விட்டது எனலாம். அங்குள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து தரை மட்டமாகின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பலத்த சூறாவளி காற்றில் கார் ஒன்று சிக்கியதில் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். கன்சாஸ் மாகாணத்தை தாக்கிய பலத்த சூறாவளி மிசோரி, அயோவா, மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா… குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.