சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: ஏப்ரலில் ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு

சென்னை: சென்னையில் கடந்த மாதம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியவர்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் 35,635 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 15,000 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.24.75 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருவொற்றியூரில் ரூ. 1,01,600, மணலயில் ரூ.29,500, மாதவரத்தில் ரூ.73,000, தண்டையார்பேட்டையில் ரூ.1,04,000, ராயபுரத்தில் ரூ.315,300, திரு.வி.க. நகரில் ரூ.1,05,500, அம்பத்தூரில் ரூ.2,22,000, அண்ணாநகரில் ரூ.3,53,100, தேனாம்பேட்டையில் ரூ.2,67,300, கோடம்பாக்கத்தில் ரூ.3,62,400, வளசரவாக்கத்தில் ரூ.74,100, ஆலந்தூரில் ரூ.1,18,000, அடையாறில் ரூ.162,200, பெருங்குடியில் ரூ.1,29,300,சோழிங்கநல்லூரில் ரூ.58,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.