பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் குழப்பம், ஆலோசனை, தாமதத்திற்குப் பின்பு மே 4 ஆம் தேதி ரீடைல் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுக் கதவுகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாளை தொடங்கவுள்ள எல்ஐசி ஐபிஓ..கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை மோடி அரசால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டதைப் பற்றிக் காங்கிரஸ் செவ்வாயன்று கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் “குறிப்பிடத்தக்க வகையில் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
உட்பொதிக்கப்பட்ட மதிப்பு
பிப்ரவரி 2022 இல் 12-14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பானது இரண்டே மாதங்களில் வெறும் 6 லட்சம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது ஏன்? இந்த மெகா ஐபிஓ (இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்) 2022 பிப்ரவரியில் செபியிடம் ப்ராஸ்பெக்டஸைத் தாக்கல் செய்யும் போது, எல்ஐசி நிறுவனத்தின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பை (EV) 2.5 மடங்காக இருந்தது.
1.1 மடங்கு மட்டுமே
ஆனால் இப்போது ஐபிஓவின் மதிப்பீட்டில் அதன் உட்பொதிக்கப்பட்ட மதிப்பை 1.1 மடங்காகக் குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் இயங்கி வரும் இதே துறையில் இருக்கும் பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில், ஹெச்டிஎப்சி லைஃப் இன்சூரன்ஸ் 3.9 மடங்கு உட்பொதிக்கப்பட்ட மதிப்பில் வர்த்தகம் செய்கிறது.
எஸ்பிஐ – ஐசிஐசிஐ
மேலும் எஸ்பிஐ லைப் மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் வர்த்தகம் 3.2 மடங்கு மற்றும் 2.5 மடங்கு முறையே உட்பொதிக்கப்பட்ட மதிப்புக் கொண்டு வர்த்தகம் செய்யும் போது ஏன் எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பை மட்டும் 1.1 மடங்காகக் குறைத்துள்ளது ஏன் என்று காங்கிரஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விளம்பரம்
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மாபெரும் ஐபிஓ என எல்ஐசி-யை விளம்பரம் செய்து விட்டு மோடி அரசாங்கம் திடீரென ‘எல்ஐசியின் மதிப்பீடு’ மற்றும் ‘வெளியீட்டு அளவை’ குறைத்தது ஏன்? எல்ஐசியின் முக்கியக் குறியீடுகளை மோடி அரசு புறக்கணிக்கிறதா? எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏன் இப்போது..?!
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் பல காரணிகள் மோசமாக இருக்கும் வேளையில் ஏன் மத்திய அரசு எல்ஐசியை விற்க முயல்கிறது? எனவும் காங்கிரஸ் தரப்பில் கேள்விகள் அடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்குப் பதில் கிடைக்குமா..?
Why LIC “Significantly Undervalued”: Congress Questions Modi govt
Why LIC “Significantly Undervalued”: Congress Questions Modi govt எல்ஐசி ஐபிஓ: காங்கிரஸ் கேள்விக்கு மோடி அரசு பதில் அளிக்குமா..?!