நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதற்கு இந்தியாவின் ஏற்றுமதி குறித்தான தரவும் ஒரு சிறந்த சான்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 24.22 சதவீதம் அதிகரித்து, 38.19 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதே பெட்ரோலியம் அல்லாத பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகரித்துள்ளது.
புதிய நிறுவனத்தை துவங்கும் பாரத்பே அஷ்னீர் குரோவர்..!
பெட்ரோலியம் அல்லாத பொருட்கள் 8 ஜுவல்ஸ்
பெட்ரோலியம் அல்லாத பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 12.32 சதவீதம் அதிகரித்து, 30.46 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் 27.12 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே ஜெம்ஸ் அன்ட் ஜுவல்ஸ் ஏற்றுமதியானது 3307 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 2.11 சதவீதம் குறைந்துள்ளது. இது ஏப்ரல் 2021ல் 3379 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மருந்துகள் & மருத்துவ சார்ந்த பொருட்கள்
பெட்ரோலியம் பொருட்கள் 113.21%மும், மின்சாதனங்கள் 64.04%, கெமிக்கல்ஸ் 26.71%மும் ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன. இதே மருந்துகள் மற்றும் மருத்துவ சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியானது, 3.93 சதவீதம் அதிகரித்து, 1966.98 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1892.58 மில்லியன் டாலர்களாக உள்ளது.
அரிசி ஏற்றுமதி
இதே அரிசி ஏற்றுமதி 768.09 மில்லியன் டாலர்களாகவும், இது கடந்த ஆண்டினை காட்டிலும் 14.24 சதவீதம் குறைந்துள்ளது. 895.60 மில்லியன் டாலர்களை எட்டியிருந்தது. இது 14 சதவீதத்திற்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது. 10 கமாடிட்டி குழுமங்களின் மொத்த ஏற்றுமதி 30,533.65 மில்லியன் டாலராக இருந்தது. இது 27.96 சதவீதம் அதிகரித்துள்ளது.
இறக்குமதி அதிகரிப்பு
ஏற்றுமதி விகிதம் அதிகரித்து காணப்பட்டாலும், அதே நேரம் இறக்குமதி அதனை விட அதிகரித்து, ஏப்ரல் மாதத்தில் 58.26 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 46.04 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலையுயர்ந்த ஆபரணங்கள்
இதில் பெட்ரோலியம் அல்லாத இறக்குமதியின் மதிப்பு ஏப்ரல் மாதத்தில் 38.75 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 9.87% அதிகமாகும். ஏப்ரல் 2021ல் 35.27 பில்லியன் டாலர்களை விட 9.87% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
எண்ணெய் அல்லாத, தங்கம் அல்லாத, வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் இறக்குமதி, ஏப்ரல் மாதத்தில் 34.43 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஏப்ரல் 2021ல் 26.55 பில்லியன் டாலராக இருந்தது.
எண்ணெய் இறக்குமதி
தாவர எண்ணெய் இறக்குமதிகள் ஏப்ரல் மாதத்தில் 1721.77 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் 2021ல் 1289.13 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது முக்கிய 10 பொருட்களின் விலைகள் 47,046.66 மில்லியனாகவும், இது கடந்த ஆண்டினை காட்டிலும் 29.89 சதவீதம் அதிகரித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 38.19 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இறக்குமதியானது 26.55 சதவீதம் அதிகரித்து, 58.26 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறையானது 20.07 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது.
India’s exports surge 24% rise to $38.19 billion in April 2022: trade deficit widens
India’s exports surge 24% rise to $38.19 billion in April 2022: trade deficit widens/இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. ஆனால் ஒரு நல்ல விஷயமும் இருக்கு..!