பாபி சிம்ஹாவின் புதிய படம் 'தடை உடை' துவக்கம்
நடிகர் பாபி சிம்ஹா நடிக்கும் 'தடை உடை' என்ற புதிய படத்தை அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. நடிகை மிஷா நராங் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் 'தடை உடை' படத்தின் படப்பிடிப்பு மே 5ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.