உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில், பாலமுருகன், அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் ‘பாலமுருகனின் குதூகலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பாலமுருகனின் குதூகலம்’. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர், பிரபல இயக்குநர் துரை செந்தில்குமாரிடம், துணை – இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்க விழாவில், தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் கலந்துகொண்டார். புதுமுகம் பாலமுருகன் கதாநாயகனாக நடிக்கும் ‘பாலமுருகனின் குதூகலம்’ படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். குக் வித் கோமாளி புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, டிஎஸ்ஆர், அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு பணியை மணி பெருமாள் மேற்கொள்ள, பிஜார்ன் சுர்ராவ் இசையமைக்க, மப்பு பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார். திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.