‛சின்னக் கலைவாணர் விவேக்' சாலை பெயர் பலகை திறப்பு
நடிகர் விவேக் கடந்தாண்டு ஏப்., 17ல் மாரடைப்பால் காலமானர். சில தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மற்றும் மகள் அமிர்தவர்ஷினி ஆகியோர் 'நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 128வது வார்டில் நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையான விருகம்பாக்கம், 'பத்மாவதி நகர் பிரதான சாலை'க்கு, 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' என பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதையடுத்து இந்த சாலையை பெயர் மாற்றத்துடனான பெயர் பலகையை இன்று அமைச்சர் மா.சுப்ரமணியம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். விவேக் பெயர் மாற்றத்துடன் இந்த சாலை இன்று(மே 3) முதல் நடைமுறைக்கு வந்தது.