ஹைதராபாத் : உறவினர் இறந்து விட்டதால் அவசர விடுமுறை கேட்ட அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவரிடம் இறந்தவருடன் ‘செல்பி’ எடுத்து அனுப்பினால் தான் விடுமுறை என மேலாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவரின் உறவினர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த டிரைவர் தன் மேலாளருக்கு போன் செய்து அவசர விடுமுறை கேட்டார். ஆனால் மேலாளரோ இறந்தவருடன் ‘செல்பி’ எடுத்து அனுப்பினால்தான் விடுமுறை தர முடியும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இறந்தவருடன் எப்படி செல்பி எடுக்க முடியும் என நெருங்கிய நண்பர்களிடமும் சக ஊழியர்களிடமும் கூறி வருத்தப்பட்டார். உயர் அதிகாரி வி.எஸ்.ராவ் கூறுகையில்“இதுபற்றி விசாரித்து மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.
ஹைதராபாத் : உறவினர் இறந்து விட்டதால் அவசர விடுமுறை கேட்ட அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவரிடம் இறந்தவருடன் ‘செல்பி’ எடுத்து அனுப்பினால் தான் விடுமுறை என மேலாளர் கூறியது பரபரப்பை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.