எல்லோரிடமும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பெரும் தொகையாக முடியாது என்பதால் முதலீடு செய்ய முடியாமல் இருப்பர்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும்.
இதன் மூலம் ஒருவர் மாதம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்ய முடியும்.
வருமானம் அதிகம்
அதேபோல இந்த எஸ்ஐபி (SIP) மூலம் மாத மாதம் முதலீடு செய்யலாம். ஆக ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக, மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ, குறிப்பிட்டகால இடைவெளியில் முதலீடு செய்து கொள்ளலாம். இது வங்கிகளில் செய்யும் தொடர் வைப்பு போன்றே செய்யலாம். ஆனால் வங்கி தொடர் வைப்புகளில் கிடைக்கும் வருமானத்தினை விட, இதில் வருமானம் அதிகம்.
எப்படி கோடீஸ்வரர் ஆவது?
இந்த எஸ்ஐபி மூலம், அதிலும் மாதம் 1000 ரூபாய் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா? இது குறித்து செபியில் பதிவு செய்த நிபுணர் கூறுகையில், சராசரியாக 15% வருமானம் கிடைக்கும் என்றால், உங்களது எஸ் இ பி மூலம் 25 – 30 ஆண்டு ஆண்டுகளில் உங்களது இலக்கினை அடைய முடியாது. இது உங்களது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டினையும் அதிகரிக்கனும். இதன் மூலமே இலக்கினை அடைய முடியும் என கூறியுள்ளார்.
கணக்கீடு
உதாரணத்திற்கு மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதனை 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், மாதம் சராசரியாக 15 சதவீதம் வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.
ஆரம்ப கால முதலீடு – ரூ.1000
மொத்த முதலீட்டு தொகை – ரூ.3,60,000
முதலீட்டு காலம் – 30 ஆண்டுகள்
வருவாய் விகிதம் – ரூ.66,49,821
மொத்த மதிப்பு – ரூ.70,09,821
எப்படி ரூ.1 கோடி சாத்தியம்
மேற்கண்ட அதே முதலீட்டில் ஆரம்பித்து ஆண்டுக்கு ஆண்டு 10% ஸ்டெப் அப் செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் உங்களது இலக்கினை அடைய முடியும்.
ஆரம்ப கால முதலீடு – ரூ.1000
மொத்த முதலீட்டு தொகை – ரூ.19,73,928
முதலீட்டு காலம் – 30 ஆண்டுகள்
வருவாய் விகிதம் – ரூ.1,19,47,305
மொத்த மதிப்பு – ரூ.1,39,21,233
ரூ.2 கோடி சாத்தியமா?
இதே மாதம் 1000 முதலீட்டில் ஆரம்பித்து, 15 சதவீதம் ஸ்டெப் அப் செய்தால், அதன் மூலம் முதிர்வு காலத்தில் மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க முடியும்.
ஆரம்ப கால முதலீடு – ரூ.1000
மொத்த முதலீட்டு தொகை – ரூ.52,16,942
முதலீட்டு காலம் – 30 ஆண்டுகள்
வருவாய் விகிதம் – ரூ.1,86,59,432
மொத்த மதிப்பு – ரூ.2,38,76,373
How to become a millionaire with an investment of Rs.1000 per month?
How to become a millionaire with an investment of Rs.1000 per month?/மாதம் ரூ. 1000 முதலீட்டின் மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி.. எத்தனை ஆண்டுகள் முதலீடு!