தமிழகத்தில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதையடுத்து திருச்சி மற்றும் திருத்தணியில் 104 டிகிரியும், மதுரையில் ஒரு சில இடங்களில் 102 டிகிரியும், மற்ற ஒரு சில இடங்களில் 103 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் ஈரோடு, கரூர், பரமத்தி, தஞ்சை ஆகிய இடங்களில் 102 டிகிரியும், சேலத்தில் 101 டிகிரியும், பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.