அர்ஜூன் அண்ணா… ரசிகையின் பாசக்குரல்… மேடையில் கலங்கிய பிரபல சீரியல் நடிகர்

Tamil Serial Roja Actor Sibbu Suryam Emotional Sppech : சின்னத்திரையில் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சீரியலுக்கு பெயர் பெற்றது சன்டிவி. காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பல சீரியலை ஒளிபரப்பும் சன்டிவிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அவ்வப்போது புதிய சீரியல்ககளை களமிறங்கி வருகிறது.

சீரியலோடு மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வரும் சன்டிவியில், சீரியல் நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் சன்குடும்ப விருதுகள் என்ற பெயரில் சிறந்த சீரியல் நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான சன்குடும்ப விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் மக்களின் மனம்கவர்ந்த நாயகன் விருது சன்டிவியின் ரோ’ஜா சீரியல் நாயகன் சிப்பு சூரியுனுக்கு வழங்கப்பட்டது. சன்டிவியின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ரோஜா சீரியல் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வருமு் இந்த சீரியலில் வடிவுக்கரசி, நடிகர் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நடிகர் சிப்பு சூரியனுக்கு இயக்குநர் சிறுத்தை சிவா விருதை வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிப்பு சூரியனின் தீவிர ரசிகர்கள் இருவர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அதில் முதலில் வந்த ஒரு குழந்தை அவருக்கு போட்டோ ஒன்றை கிப்டாக் கொடுத்து விட்டு சென்றது.

அடுத்து மேடையில் உள்ள ஸ்கிரீனில் ஒரு கணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய அந்த பெண் ரசிகை தான் அர்ஜூன் அண்ணாவின் மிகபெரிய ரசிகை என்றும், அவர் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதன்பிறகு அவர் தனது குடிசை வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்போதுதான் தெரிகிறது அவர் மாற்றுத்திறனாளி என்று.

தொடர்ந்து அந்த மாற்றுத்தினாளி பெண் ரசிகை நிகழ்ச்சிக்கு வந்திருந்ததை அறிந்த நடிகர் சிப்பு சூரியன்,தன்னை அண்ணா என்று கூறி பாசமாடு அழைத்த ரசிகையை கையில் தூக்கியபடி மேடைக்கு சென்றுள்ளார். அவரின் வாழ்க்கை கதையை கேட்டு சிப்பு சூரியன் கண் கலங்குகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  .

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.