புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
நான் அலுவலகத்தைத் திறந்து வைக்க வந்தபோது, பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாகவும், தொண்டர்கள் நிறைந்ததாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மோடியின் தலைமையில், பா.ஜ.க, நாட்டை மாபெரும் சக்தியாக முன்னோக்கி கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாட்டில் உள்ள தொழிலாளிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்காக ஒவ்வொரு பாஜக தொண்டரும் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து வருகிறார்கள்.
மோடி அரசு, பிரச்சனைகளை தீர்க்கும் அரசு, நாட்டுக்கு புதிய திசையையும் தொலைநோக்கு பார்வையையும் வழங்கும் அரசு.
நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு தலா ஐந்து கிலோ கோதுமை, அரிசி, குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு வழங்கும் பணியை மத்திய அரசு செய்துள்ளது.
முன்பு இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது, இன்று இந்தியா மிகப்பெரிய ஏற்றுமதி மையமாக மாறி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…இந்தியாவின் வளர்ச்சியால் உலகம் பயனடைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்