நமது அன்றாட வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு சில இயற்கை மருத்துவகுறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
- தக்காளியை அதிகமாக சமையலுக்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் தக்காளியை தினமும் பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அதனால் தினமும் ஒரு தக்காளி பச்சையாக சாப்பிடலாம்.
- தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெள்ளரிக்கா சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாயை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
- வெந்தயம் அல்லது வெந்தியக்கீரை மற்றும் கொத்தமல்லி இரண்டையும் ஒன்றாக அரைத்து தலைத் தேய்த்து குளித்தால் தலைமுடி பட்டுபோல் மின்னும்.
- பாகற்க்காயை நன்றாக நறுக்கி காயவைத்து, நன்றாக பொடி செய்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெண்ணீரில் கலந்து குடித்தால் அல்சர் குணமாகும்.
- குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலையை போட்டு ஐந்து மணி நேரம் ஊற வைத்து குழந்தைக்கு கொடுத்தால் குழந்தைகளை எந்த நோயும் தீன்டாமல் பாதுகாத்துக் கொள்கிறது.
- தினமும் வெள்ளை எள்ளை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் உங்களுக்கு எளிதாக கால்சியம் சத்து கிடைக்கும்.
- சரும நோய் குணமாக தினமும் அருகம்புல் வேரை விழுதாக அரைத்து முகத்தில் போட்டுக் கொண்டால் சரும நோய்கள் குணமாகும்.
- புதினா இலை சாறு அல்லது அம்மன் அரிசி பச்சிலையின் சாரை, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் விரைவில் பருக்கள் குணமாகும்.
- அத்தி இலையுடன் வில்வம் இலையை சேர்த்து காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம் மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும்.
- மாதுளை பழத்தை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்களை குணப்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், வாந்தியை கட்டுப்படுத்தும்.