2022 மொத்தமும் இப்படி தான் இருக்கும்.. மக்களின் பர்ஸ் காலி..!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி அளவு பெரிய அளவில் உயர்ந்து PMI குறியீடு 54.7ஆக உள்ளது. ஆனால் இந்த உற்பத்தி அளவீடு ஜூன் காலாண்டில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 3 அட்சய திருதியை: தங்கம் வாங்க இதுதான் ‘நல்ல; நேரம்..!

இந்த உற்பத்தி சரிவால் இத்துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்..?!

உக்ரைன் மற்றும் சீனா

உக்ரைன் மற்றும் சீனா

உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கோவிட் தொற்று எதிரொலியாக அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் காரணமாக உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை தற்போது இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ஆட்டோமொபைல் - எலக்ட்ரானிக்ஸ்

ஆட்டோமொபைல் – எலக்ட்ரானிக்ஸ்

இதனால் ஜூன் காலாண்டில் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் போதிய உதிரிப்பாகங்கள், மூலப்பொருட்கள் கிடைக்காமல் கடுமையான வர்த்தக நெருக்கடிகள் இருக்கும் என முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 உற்பத்தி செலவுகள்
 

உற்பத்தி செலவுகள்

மேலும் தற்போது உள்ளீட்டுச் செலவுகள் அதாவது மூலப்பொருட்கள் முதல் உற்பத்தி செலவுகள் வரையில் அனைத்தும் வாழ்நாள் உச்சத்தில் இருக்கும் வேளையில் அனைத்து துறையிலும் விலை உயர்வு கட்டாயம் இருக்கும் இதற்கு நுகர்வோர் ஆகிய மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் உற்பத்துறை நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளும், இத்துறை வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.

 5-10% உற்பத்தி பாதிப்பு

5-10% உற்பத்தி பாதிப்பு

தற்போது வெளியாகியுள்ள கணிப்புகளின் படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்கள் போதுமான அளவிற்குக் கிடைப்பது இல்லை, இதேவேளையில், தாமதமாகக் கிடைக்கிறது இதனால் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் தங்கள் திட்டமிட்ட உற்பத்தியில் 5-10% பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியப் பிரச்சனை

முக்கியப் பிரச்சனை

தற்போது பொருட்களின் விலை உயர அடிப்படை காரணம் சரக்கு போக்குவரத்தின் செலவுகள் அதிகரிப்பு, ஸ்டீல் விலை உயர்வு, செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவை தான் இந்திய உற்பத்தித் துறையைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

கார் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தி மற்றும் விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் வாகனங்கள் 10% குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது. ஹூண்டாய் மோட்டாரின் உள்நாட்டு விற்பனையும் இதே அளவில் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ukraine war, China Covid curbs affected components supply; Hike hike unavoidable, production impact

Ukraine war, China Covid curbs affected components supply; Hike hike unavoidable, production impact 2022 மொத்தமும் இப்படித் தான் இருக்கும்.. மக்களின் பர்ஸ் காலி..!

Story first published: Tuesday, May 3, 2022, 10:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.