மேற்கு உக்ரைனில் ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பலி- அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல்

மேற்கு உக்ரைன் ரிவ்னே பிராந்தியத்தில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு மக்களுக்கு நேற்று நடத்திய தினசரி உரையில், மேற்கு ரிவ்னே பிராந்தியத்தில் பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்தில் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் எரிபொருள் லாரி மோதிக்கொண்டன. இதில், தற்போதைய நிலவரப்படி 17 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரலாம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து உக்ரைனுக்கு எதிரான ரஷிய போருடன் நேரடி தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் ஜெலன்ஸ்கி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்..
அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்- அனல் காற்று வீசும் என எச்சரிக்கை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.