நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து ஓட்டுநரின் பக்கவாட்டு கண்ணாடியை ஒற்றை காட்டு யானை ஒன்று உடைத்து தாக்கியதால் பயணிகள் அனைவரும் பீதி அடைந்தனர்.
முள்ளூர் என்ற இடத்தில் அரசு பேருந்து சென்ற போது அங்கு ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தது. பின்னர் அந்த யானை திடீரென அரசு பேருந்தை நோக்கி சென்று ஓட்டுநரின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல்களின் கண்ணாடியை தாக்கியது.
இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் சத்தம் எழுப்பியதால் அங்கிருந்து சென்ற யானை மீண்டும் சாலையிலேயே உலா வந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.