தே.மு.தி.க. சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி- விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை:
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தி.மு.க. சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் எனவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன் வந்துள்ளார். இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தே.மு.தி.க. சார்பில் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.