Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கத்தரி வெயில் இன்று தொடங்கியது!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கி, மே 28 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, காலை 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள்,நோயாளிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
IPL 2022: பஞ்சாப் அணி அபார வெற்றி!
ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி வெற்றது.
Tamil Nadu news live update
18 டன் தங்கம் விற்பனை
தமிழகத்தில் அட்சய திருதியை முன்னிட்டு 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. ரூ.9,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டன. இது 2019ஆம் ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரிய டிஜிட்டல் சந்தை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.. மோடி!
6 ஆண்டுகளுக்கு முன் இந்தியா தனி நபர் தரவு நுகர்வு அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. இன்று பல பெரிய நாடுகளை விட இந்தியா தற்போது அதிகளவில் டேட்டாவை உபயோகிக்கிறது. புதிதாக கிராமங்களிலிருந்து அதிகளவில் டேட்டாவை உபயோகிக்கின்றனர்; இதன்மூலம் ஒரு பெரிய டிஜிட்டல் சந்தை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது என டென்மார்க்கில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. இரு நாட்களில் மட்டும் 5,620 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதால் பாலிசிதாரர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்த பங்கு விற்பனைக்குப் பிறகும் எல்ஐசி நிறுவனத்தின் 96.5 விழுக்காடு பங்குகள் மத்திய அரசிடமே இருக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
நாளை (மே 5) தொடங்கவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பல்லாவரம் மின் கோட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதியம் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
வட சென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
மன்னார் பேசாலைப் பகுதி வழியாக, தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது.
வட சென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
மன்னார் பேசாலைப் பகுதி வழியாக, தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை இன்று மீண்டும் விசாரணை நடத்துகின்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்காக ரூ. 2.38 கோடியில் வாங்கப்பட்ட 29 புதிய வாகனங்களை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில், 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலையத்தில் 60 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது.
ஜோத்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 3,205 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 2,802 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு மே 5 தொடங்கி, மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,91,343 மாணவர்களும், 4,31,341 மாணவிகளும் இத்தேர்வை எழுத உள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி, டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிரான்ஸ் செல்கிறார்.
4 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடத்தப்பட உள்ளன.
மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் மே 23 முதல் 28ஆம் தேதி வரை புனேவில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.