கடல் வழியாக தமிழகம் வர முயற்சி: ஈழத்தமிழர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வர முயன்றதாக ஈழத்தமிழர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை மன்னார் பேசாலைப் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செல்ல முற்பட்டதாக 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் பேசாலை கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
image
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் போலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.