உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் புது தகவலை வெளியிட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டான்பாஸின் வடக்கில் முன்னேறும் முயற்சியில், ரஷ்யா 22 பட்டாலியன் குழுக்களை
கிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியின் Izium அருகே நிலைநிறுத்தியுள்ளது.
உக்ரேனிய பாதுகாப்புகளை உடைத்து முன்னேற போராடிய போதிலும், ரஷ்யா Izium தாண்டி கிராமடோர்ஸ்க் மற்றும் செவெரோடோனெஸ்ட்க் நகரங்களைக் கைப்பற்ற விரும்புகிறது.
இது வடகிழக்கு டான்பாஸில் ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்கும் என்று பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய கான்வாய்யை சாம்பலாக்கிய உக்ரைன் படைகள்! வீடியோ ஆதாரம்
இதனிடையே, எதிர்வரும் மே 9-ம் திகதி அன்று உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் அதிகாரப்பூர்வமாக போரை அறிவிப்பார் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.