Tamil Serial Raja rani Rating Update : ஒரே குடும்பத்திற்கு வந்த இரண்டு மருமகள்கள் ஒருவர் குடும்பத்திற்கு நல்லது செய்ய பார்க்கிறார். ஆனால் மாமியார் அவர் எப்போவோ செய்த தப்பை மனதில் வைத்தக்கொண்டு எப்போதும் ஒரு சந்தேக கண்ணுடனே பார்க்கிறார். ஆனால் 2-வது மருமகள் குடும்பத்திற்கு செய்வது எல்லாமே துரோகம்தான் அது தெரிந்து அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் மாமியார்.
பெரிய அளவில் யோசிக்காதீங்க இது விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் தான். ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் பெரிய மருமகளை படிக்க வேண்டாம் என்று மாமியார் சொல்ல அவரின் எதிர்ப்பை மீறி மகன் படிக்க வைக்கிறார். இது வருங்காலத்தில் தெரியவரும்போது ஒரு பெரிய பிரச்சினை இருக்கும்.
மறுபுறம் நாத்தனார் பார்வதி கல்யாணத்தை நிறுத்தி அதே மாப்பிள்ளைக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறாள் 2-வது மருமகள். இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை இதுதான். ஏற்கனவே மாமியார் மேல போலீஸ் கம்லைண்ட் கொடுக்க விவாகாரம் தெரியவந்து 2-வது மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றினார் மாமியார்.
ஆனால் முதல் மருமகள் சப்போர்ட் பண்ணி அவளை மீண்டும் வீட்டிற்குள் வர அனுமதித்தார். ஆனால் அப்போ கூட மாமியாருக்கு 2-வது மருமகள் மேல் உள்ள பாசம் குறைந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உண்மையை கண்டுபிடித்த மூத்த மருமகளை புரிந்துகொண்டாரா என்றால் அதுவும் இல்லை.
2-வது மருமகள் தப்பு செய்துகொண்டே போக முதல் மருமகள் அதை கண்டுபிடித்துக்கொண்டே போக எலியும் பூனையுமாக கதை சென்றுகொண்டிருந்தாலும் கெடுதல் செய்யும் கூட்டணிக்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. இப்போது பார்வதியின் முன்னாள் காதலனை தூண்டிவிடும் 2-வது மருமகள் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார்
ஏற்கனவே இவர், பார்வதிக்கு செய்த துரோகத்தை மாமியாரிடம் சொல்லியிருந்தால் இந்த கதை அத்துடன் முடிந்திருக்கும். இனிமேல் எப்படிதான் உண்மை தெரிந்து மாமியார் 2-வது மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றினாலும், முதல் மருமகள் அதை தடுத்து நிறுத்தி விடுவார் போலதான் உள்ளது.
இப்படியே அவரை மன்னித்துவிட்டு சென்றால் கடைசியில் என்னதான் ஆகும் என்று கேட்டால் யாருக்கு தெரியும் 2-வது மருமகள் மாட்டிக்கொண்டே செல்வார். முதல் மருமகள் காப்பாற்றிக்கொண்டே செல்வார் அவர்களுக்கு இது டைம் பாஸாக இருக்கலாம். ஆனால் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பு வேண்டாமா? யோசிங்க டைரக்டரே…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“