அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வருடாந்திர பயிற்சியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுக்கள் கலந்து கொண்டன.
கலிபோர்னியாவில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீயால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 10 லட்சம் ஏக்கர் காடுகளும், 2021ம் ஆண்டில் சுமார் 9 லட்சம் ஏக்கர் காடுகளும் தீக்கிரையாகின.
இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கையாக காட்டுத் தீயை கையாள்வது குறித்து வனவியல் மற்றும் தீயணைப்புத் துறை சார்பில், பெயின்ஸ் க்ரீக்கில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் தீயணைக்கும் நுட்பங்கள் குறித்தும் கருவிகளை கையாளுதல் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.