தற்கொலைக்கு முயன்ற தினேஷ் கார்த்திக்! மனைவி செய்த துரோகம்… தடைகளை தாண்டி உச்சம் தொடும் தமிழன்


நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும் தமிழத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சொல்லப்போனால் ஆர்.சி.பி அணியே அவரை நம்பி தான் உள்ளது.
ஏனெனில் இந்த ஆண்டு தொடரில் அவரால் தான் ஆர்.சி.பி அணி வெற்றிகளை பெற்று வருகிறது.

வாழ்க்கையில் பல்வேறு அடிகளை தாண்டியே தினேஷ் கார்த்திக் மீண்டு எழுந்து வந்துள்ளார்.
அவரது சக அணி வீரர் முரளி விஜய், தினேஷின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இது தமிழ்நாடு ரஞ்சி அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும். கார்த்திக்கைத் தவிர. இறுதியாக ஒரு நாள் அவர், முரளி விஜயின் குழந்தையை சுமந்து கர்ப்பமாக இருப்பதாகவும், விவாகரத்து செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

அவர்கள் விவாகரத்து பெற்றனர், மேலும் அந்தப்பெண் முரளி விஜயுடன் குடும்ப வாழ்வுக்கு சென்றுவிடுகிறார்.
தினேஷ் கார்த்திக் மனதளவில் உடைந்து போனார்.

ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார், தாடி வளர்த்தார், தேவதாஸ் ஆனார். அவரது செயல்திறன் குறைந்து, இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ரஞ்சியில் தோல்வியடையத் தொடங்கினார் மற்றும் முரளி விஜயிடம் அதனது மனைவியை மட்டுமல்ல கேப்டன் பதவியையும் இழந்தார்.

அவர் ஐபிஎல் போட்டியிலும் தோல்வியடையத் தொடங்கினார். மேலும் அவரது ரஞ்சி அணியின் தோல்விகளால் மனச்சோர்வடைந்ததால் தற்கொலை செய்து கொள்ள விரும்பினார்.

ஜிம்மிற்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். அவரது பயிற்சியாளர் அவரை அவரது வீட்டிற்குச் சென்று பார்வையிட்டார், தினேஷ் முழு குழப்பத்தில் இருப்பதைக் கண்டார். தினேஷ் கார்த்திகை மீண்டும் தனது பயிற்சியை தொடங்குமாறு வற்புறுத்தி, தீபிகா பல்லிகலுக்கும் பயிற்சி அளித்து வந்த ஜிம்மிற்கு அவரைத் திரும்ப அழைத்துச் சென்றார்.

அவர் பரிதாபமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீபிகா பயிற்சியாளருடன் சேர்ந்து அவருக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கினார். மெதுவாக தினேஷ் கார்த்திக்குக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார். 

முரளி விஜய், தினேஷின் முதல் மனைவியைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் தோல்வியை நோக்கி பயணப்பட தொடங்கினார். முதலில் இந்திய அணியிலிருந்தும் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

ஆனால் தீபிகாவால் ஊக்கப்படுத்தப்பட்ட தினேஷ், வலைப்பயிற்சிகளை ஆரம்பித்து உள்நாட்டுப் போட்டிகளில் அதிக ஸ்கோரை அடித்து மீளவும் தனக்கான இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். அவர் மீண்டும் இந்திய தேசிய அணிக்காக 2019 உலகக் கோப்பை தொடருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கேப்டனானார்.

அதன்பின்னர், ரிஷப் பாந்த் வந்து கார்த்திக்கின் அந்த இடத்தைக் கெட்டியாக பிடித்தார். அந்தநேரத்தில் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் மட்டும் விளையாட தினேஷ் விரும்பியிருக்கிறார். இந்த சமயத்தில் அவருடைய மனைவி தீபிகா கர்ப்பமாகிறார். அவர்களுக்கு இரட்டை குழந்தைகளை கடவுள் பரிசளிக்கிறார்.

அதன்பின்னர் 2022-ல் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அவரைப் பெறுவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சித்தது ஆனால் ஆர்சிபியால் ஏலம் எடுக்கப்படுகிறார்.

இப்போது எல்லாவற்றிலிருந்தும் மீண்ட தினேஷ் கார்த்திக், இந்தியாவுக்கான பினிஷராக தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார், ஆர்சிபிக்கு முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுக்கிறார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.