மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் ஆதீனம் மடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்தநிகழ்ச்சியில், தர்மபுரம் ஆதீனத்தை வெள்ளிப் பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வது வழக்கம். குருவுக்கு சிஷியர்கள் செய்யும் மரியாதையை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் மடத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
இதுகுறித்து, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவிக்கையில், “தருமபுரம் ஆதீனம் மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது, எங்களைப் போன்ற சைவ மட ஆதீனகர்த்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரம் ஆதீனம் எனக்கு குருநாதர், நான் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் நிச்சயமாக கலந்து கொண்டு, தருமபுரம் ஆதீனத்தின் வெள்ளிப் பல்லக்கை நானே தூக்குவேன். என் உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்.
தமிழக முதல்வர் ரகசிய காப்பு பிரமானம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என்று எவரும் சொல்ல முடியாது. அது போலத்தான் இந்த நிகழ்ச்சி. பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுத்து, தருமபுரம் பட்டினபிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும்.
தமிழ்த்தாய் கொலுவிருக்கும் இடம்தான் ஆதீனம். திருநாவுக்கரசர் பல்லக்கை திருஞானசம்பந்தர் சுமந்துள்ளார். எனவே, திராவிடர் கழகத்தலைவர் வீரமணிக்காக இது போன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.